கரூர் மாவட்டம், சொட்டையூர் பகுதியில் நொய்யல்- வேலாயும்பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளையும், வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களையும், அழுகிய காய்கறிகளையும் கொட்டி வருகின்றனர் .இந்நிலையில் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கழிவுகள் மீது மழை நீர் தேங்கி ஏராளமான கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது .கொசுக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களை தீண்டி டெங்கு மற்றும் பல்வேறு காய்ச்சல்கள் வரும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.