காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெரு முடியும் இடத்தில் உள்ள சாலை மோசமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுவதும், காயம் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.