திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகரிலிருந்து ஆவடிக்கு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இப்போது நிலைமை சரியான பின்பும் நிறுத்தப்பட்ட மேற்கூறிய பஸ் மீண்டும் இயக்கப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியிலுள்ள மக்கள் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பஸ் சேவை கிடைக்க வழி செய்ய வேண்டும்.