நடவடிக்கை எடுப்பார்களா

Update: 2026-06-28 11:14 GMT

வடபெரும்பாக்கத்தில் இருந்து ஞாயிறு செல்லும் சாலையில் செட்டி மேடு வரையிலும் சாலையின் நடுவில் சீரான இடைவெளி விட்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எதிரே வரும் வாகனத்துக்காக மறுமுனையில் செல்லும் வாகனங்கள் காத்திருக்கவேண்டியது உள்ளது. பள்ளம் சரிவர மூடாததால் அதனை கடக்க வாகன ஓட்டிகள் இன்னலை அனுபவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்