போக்குவரத்து இடையூறு

Update: 2026-06-28 11:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி முதல் கீரனூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணி செம்மட்டி விடுதி நான்கு ரோட்டில் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு சாலை நான்கு புறமும் அகலப்படுத்தப்பட்ட நிலையில், கடை இடித்த மண் இன்னும் அகற்றப்படாமல் அதன் மீதே தார்சாலை போடப்பட உள்ளது. அந்த மண் மேட்டை அப்புறப்படுத்தாமல் தார்சாலை போட்டால் மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அந்த மண் குவியலை முழுமையாக அப்புறப்படுத்திய பின் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்