பஸ் வசதி வேண்டும்

Update: 2026-06-28 11:16 GMT

கரூர் மாவட்டம் தோரணல்கல்பட்டி நேரு நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மற்றும் அதற்கு முன் இருக்கும் காலனியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து புதிய பஸ் நிலையம் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நிலையில், கரூர் மற்றும் பல்வேறு பகுதிக்கு வேலைக்குச் செல்பவர்கள் நகர பேருந்து அல்லது மினி பஸ் வசதி இல்லாததால் புதிய பஸ் நிலையத்துக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், காலை மற்றும் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்புபவர்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்