பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை

Update: 2026-06-28 11:16 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி - சேலம் மெயின் ரோட்டில் உள்ள வாத்தலையில் இருந்து தினமும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். மேலும், வாத்தலைக்கு அருகில் முக்கொம்பு அமைந்துள்ளதால் தினமும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பெரும்பாலான புறநகர் பஸ்கள் இங்கு நின்று செல்வதில்லை. இதனால், உரிய நேரத்திற்குப் பஸ் கிடைக்காமல் வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாத்தலையில் அனைத்துப் புறநகர் பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்