மோசமான சாலை

Update: 2022-08-20 14:51 GMT

காஞ்சீபுரம் மாவட்ட எல்லைப்பகுதியான வளையக்கரணை ஊராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைப்பகுதியான ஆப்பூர் ஊராட்சியில் வனத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தற்போது இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் செல்லவே முடியாத அளவுக்கு மோசமாக காட்சிதருகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்