உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி ஊராட்சி, மேட்டுத்தெரு முகப்பில் 20 வருடங்களுக்கு முன்பு சத்துணவு கூடம் கட்டப்பட்டது. இந்த சத்துணவு கூடமானது 20-க்கும் மேற்பட்ட குழ்ந்தைகளுக்கு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே சத்துணவு கூடத்தை சீரமைத தர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.