காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் என்.ஜி.ஓ. காலனியில் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. அப்பகுதியில் சென்று வரும் வழி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்ல மிகவும் சிறமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மக்கள் அப்பகுதியை கடக்கும் போது கீழே விழுந்து அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. என்வே பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்து தர கேட்டுக்கொள்ளப்படுகிறது.