நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-17 14:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கூரம் அஞ்சல் உழக்கோல்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி ஒரு வருடத்திற்கு மேலாக திறக்கப்படாமலே உள்ளது. மேலும் பழைய தண்ணீர் தொட்டி சேதம் அடைந்து எப்போது கீழே விழுமோ என்று அச்சப்படும் சூழலில் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு தண்ணீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும். அருகில் மக்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் நியாய விலை கடையும் உள்ளது. இந்த விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கேட்டுகொள்கிறேம்.

மேலும் செய்திகள்