பொதுமக்கள் கண்டனம்

Update: 2022-08-17 14:35 GMT

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அனைத்து கிராமங்களுக்கும் சொல்லப்படவில்லை. மேலும் 12 கிராமங்களிலும் பல்லாயிரம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் ஊருக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்பது இயற்கை நியதிகளுக்கு முரணானது. அரங்கேறிய மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் ஒரு பொது அரங்கில் நடத்தப்படாமல் தனி தனி ஊர்களாய் பிரித்து அதில் சில தனிபட்ட நபர்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது ஏற்புடையதல்ல. மேற்கண்ட காரணங்களுக்காக நடைபெற்ற கூட்டத்தை நிராகரித்து புதிய கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்