காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பாலாற்று பகுதியில் வாலாஜாபாத்தையும் அவலூர் பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் கடந்த பருவ மழையின் போது முழுவதுமாக சேதம் அடைந்தவிட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் தரைப்பாலத்தில் உள்ள மண் சரிந்து மீண்டும் பழையபடி சேதமடைய தொடங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தரைப்பாலத்தை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.