காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, பட்டூர் பகுதியில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் தொட்டி மோசமான நிலையில் உள்ளது. தண்ணீர் தொட்டியின் சுவர்கள் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு தண்ணீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.