காஞ்சீபுரம் ரெயில்வே சாலை, ராஜாஜி சந்தை முகப்பு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் ஏராளமான பயணிகள் வெயிலிலும் மழையிலும் காத்துக் கிடந்து பஸ் ஏறி செல்லும் சூழல் ஏற்படுகிறது. மழை காலம் வர இருப்பதால் விரைவில் நிழற்குடை அமைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வழி செய்ய வேண்டும்.