காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு, பாலாறு பாலம் சந்திப்பு புறவழி சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.