காஞ்சீபுரம் மாவட்டம் மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே குடியிருப்பு பகுதிகளில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் காலை முதலே குடிமகன்கள் குடித்துவிட்டு, அங்கேயே விழுந்துகிடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பஸ் நிறுத்ததில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை வீசிவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.