சாலவாக்கம், திருமுக்கூடல் சாலையில் கனரக வாகனங்கள் அதிக பாரம் கொண்ட சிமெண்ட், ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்கிறது. இதனால் அந்த கட்டிட சாமாண்கள் பெருமளவில் சாலையில் சிந்துகிறது. இதனால் அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பயணிகள் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.