உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவின்யூவில் கடந்த 2012 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை இன்றுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த கட்டிடத்தில் இருக்கும் ரேஷன் கடையை உடனடியாக துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால் பழுதடைந்தும் வருகிறது. ரேஷன் கடை திறப்பதற்கு வழி கிடைக்குமா?