சாலை மோசம்

Update: 2022-08-13 15:09 GMT

உத்திரமேரூர் அருங்குன்றத்திலிருந்து பழவேரி செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சுற்றி உள்ள கல்குவாரியிலிருந்து கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை சீரமைக்கப்படாததால் அரசு மற்றும் நகர பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்வதில்லை. மேலும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்படும் சூழலும் அமைகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்