காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு இளைப்பாறுவதும், அவ்வப்போது விபத்துகளில் சிக்கி காயம் அடைவதும் வாடிக்கையாகி வருகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.