கேள்விக்குறியான சுகாதாரம்

Update: 2022-08-09 14:56 GMT

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில், ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை போதிய பராமரிப்பின்றியும், தண்ணீர் வசதி இல்லாமலும் இருக்கிறது. மிகுந்த துர்நாற்றம் வீசியும், கழிப்பறைக்குள் சென்றாலே முகம் சுழிக்கும் வகையிலும் இருக்கிறது. இதனால் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சுத்தமும் சுகாதாரமும் மேம்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்