கோவில் நகரமான காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் நகரத்திற்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான கோவில்களில் குடிநீர் வசதி செய்து தரப்படாமலே உள்ளது. இது பக்தர்களுக்கிடையில் பெரும் குறையாக உள்ளது. எனவே அனைத்து கோவில்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.