காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு, கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இதனால் வயதானவர்கள், பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவீன கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.