பட்டூரில் இருந்து மவுலிவாக்கம் செல்லும் சாலையில் ஏராளமான மாடுகள் உலாவி வருகின்றன. மவுலிவாக்கம் மேம்பாலத்தின் கீழ் அமர்ந்திருக்கும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து மதுரவாயல் செல்லும் பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் கால்நடைகள் வாகனத்தில் மோதி இறக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.