காஞ்சீபுரம் மாவட்டம், மாடம் பாக்கம் வள்ளலார் நகர் முதல் மாடம் பாக்கம் மெயின் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது.காலை முதல் இரவு வரை, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். தைலாவரம் பகுதியில் மதுபான கடை உள்ளதால் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தவன்னம் இருக்கிறது. எனவே காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.