காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. சமுதாய கூடம் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?