ஏன் இந்த பாரபட்சம்?

Update: 2022-08-04 14:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் ஊராட்சி செயலர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் 5 முதல் 10 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியில் இருப்பவர்களை ஏன்? பணி மாறுதல் செய்யவில்லை. அரசு விதிகள் அனைவருக்குமா?, இல்லை குறிப்பிட்ட ஒரு சில ஊராட்சி செயலர்களுக்கு மட்டுமா? கிராம நிர்வாக அலுவலர்கள் 3 ஆண்டுகள் ஒரே கிராமத்தில் பணி செய்து முடிந்ததும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்வது போல், ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி செயலர்களை மாற்ற செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்