தஞ்சை-பட்டுக்கோட்டை சாலை பாலம் இறக்கத்தில் உள்ள பஸ் நிலையம் பராமரிப்பு இல்லாமல் செடி,கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறார்கள். இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை