பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-13 13:59 GMT


தஞ்சை-நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே தவறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்