காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் வாலாஜாபாத் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குவிந்து வைக்கப்படும் குப்பை கழிவுகளால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?