
காஞ்சீபுரம் ராஜாஜி சந்தை பகுதியில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. ராஜாஜி காய்கறி சந்தையில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் பல நாட்களாக அள்ளிச் செல்லாமல் தும்பவனம் அருணாச்சலம் தெருவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை மூடி செல்கின்றனர். உடனடியாக மேற்கூறிய பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.