தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அருகே உள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூட வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக பெரிய கம்பிகள் உள்ளது.இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து இடையூறாக உள்ள கம்பிகளை அகற்ற வேண்டும்.
ஜெய்சங்கர் பட்டுக்கோட்டை