தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே வருகிறது.குறிப்பாக மன்னை நகர்,சாமு முதலி தெரு,பெரிய கடைத்தெரு,இந்திரா நகர்,முத்துப்பேட்டை ரோடு மற்றும் இதர பகுதிகளிலும் அதிகமாக உள்ளது.பொதுமக்கள், மாணவர்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெய்சங்கர், பட்டுக்கோட்டை