தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் டி.இ.எல்.சி. மைதானம் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன மரம் நீண்ட நாட்களாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் பள்ளிகூடங்கள் உள்ளதால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பட்டுப்போன மரம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்ற வேண்டும்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை