தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் ராஜீவ்நகர் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை- நாகை சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள சாலை என்பதால் தற்போது பணி நடைபெறும் இடத்தில் வாகனம் செல்ல சிரமமாக உள்ளது. ஆகவே மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும், பணி நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள் இருக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை