தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா அருகே நிழற்குடை உள்ளது. இது நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதியடைகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை