தஞ்சை -நாகை சாலையில் உள்ள ராஜீவ்நகர் எதிரில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதானல் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம்மா சரவணன், தஞ்சை