தஞ்சாவூர் மாவட்டம் கடகடப்பை ஊராட்சி அண்ணா நகர் தெருவில் மழை நீர் வடிகால் வாரியம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது அந்த வேலை தற்போது பாதியில் நிறுத்திவிட்டு சென்று விட்டார்கள். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த தெருவின் வழியாக செல்ல இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை