மின் விசிறி இயங்குமா?

Update: 2023-03-22 10:54 GMT


தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் வந்து செல்கிறார்கள்.பயணிகள் வசதிக்காக அவர்கள் அமரும் இடங்களில் மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் மின் விசிறி செயல்படவில்லை. தற்போது வெயில் காலம் என்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விசிறி இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கும்பகோணம்

மேலும் செய்திகள்