தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி அருகே முத்துப்பேட்டை சாலையிலிருந்து வைத்திதோப்புக்கு திரும்பும் இடத்தில் பழுதடைந்த மின்கம்பம் உள்ளது. மின் கம்பத்தின் அடியில் சிமெண்டு காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் மின் கம்பம் விழும் அபாயம் உள்ளதால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெய்சங்கர், பட்டுக்கோட்டை