தஞ்சாவூர் டவுன் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது .கல்லூரிக்கு நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகள், தஞ்சாவூர்.