தஞ்சாவூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் ஆண்டி வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் விவசாய நிலத்திற்கு, மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வாய்க்கால் சரிவர தூர்வாராத காரணத்தினால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ராமாபுரம்.