பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. பொதுமக்கள், பக்தர்கள், மாணவ -மாணவிகள் என அதிகமாக போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மதுபானக் கடை இருப்பதால் ஏராளமானோர் சாலையில் நின்று மது குடித்து வருகிறார்கள். மேலும் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலுக்கு அருகில் உள்ள அரசு மதுமானக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பட்டுக்கோட்டை
===========================