கும்பகோணம் வட்டம் அத்தியூர் ஊராட்சி கு௫கூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆறு அருகே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருகில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வ௫கிறார்கள். ஆனால் ஈம காரியம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லை. திறந்த வெளியில் தான் பிணத்தை எரித்து வரும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதி.விஜயபாலன், கு௫கூர்