மது அருந்தும் இடமாகும் புதிய பாலம்

Update: 2023-01-11 13:49 GMT


தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கணபதி அக்ராஹாரத்தில் காவேரியின் குறுக்கே புதியபாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு இரவுநேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் இடமாக இப்பாலத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடன் நடமாடுகிறார்கள். மேலும் மதுவை குடித்துவிட்டு தகராறிலும் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் மது அருந்துவதை தடுத்து நிறத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணபதி அக்ராஹாரம், பாபநாசம்.

மேலும் செய்திகள்