தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அரசுபெண்கள்மேல்நிலைபள்ளி நுழைவாயில்அருகில் மாலை நேரத்தில் தரை கடை,காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இதனால் பள்ளி விடும்போது மாணவிகள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாலையில் திறக்கப்படும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை