தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோர்ட்டு அருகே மற்றும் மைனர் பங்களா எதிரே புதிய தார்ச்சாலை அமைத்து வேகத்தடையும் அமைத்தார்கள். ஆனால் வேகத்தடை மீது வர்ணம் பூசவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை மீது வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை