புனிதம் காக்கப்படுமா?

Update: 2022-09-23 15:28 GMT


கும்பகோணம் சோமேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரில் அரசியல் ,மற்றும் திருமண போஸ்டர்கள் சமீபகாலமாக ஒட்டப்படுகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். பல தரப்பட்ட மக்கள் வந்து செல்லும் கோவில் சுவற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தை காக்க சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்

மேலும் செய்திகள்