தஞ்சை நகரில் தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ராஜீவ்நகர்